Home தமிழகச் செய்திகள் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளால் அரசு அமைப்புகளுக்கு நிதிச்சுமை:

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளால் அரசு அமைப்புகளுக்கு நிதிச்சுமை:

26
0
The Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman addressing a Press Conference, in New Delhi on June 28, 2021.

தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களால் அரசு அமைப்புகள் நிதிச் சுமையை எதிர்கொள்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கிகளுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன், “தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவது குறித்து விரிவான விவாதம் தேவைப்படுகிறது.

அதேவேளையில், இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள், அதற்கான செலவினத்தை நிர்வகிப்பது தொடர்பான விவரங்களையும் வெளியிட வேண்டும்.

இலவசங்களால் ஏற்படும் நிதி இழப்பை அரசின் மற்ற அமைப்புகள் மீது சுமத்திவிடக் கூடாது. சான்றாக, கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களால் மின் உற்பத்தி நிறுவனங்களும் மின் விநியோக நிறுவனங்களும் கடும் நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றன.