மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரியில் நேற்று இரவு (25) ஆலயமொன்றில் இடம்பெற்ற கைகலப்பின்போது இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் காயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு (25) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், குளத்துமடு வாகநேரியைச் சேர்ந்த ந.ரமேஸ்காந்தன் வயது (19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
வாகநேரியில் உள்ள துரோபதி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் இடம்பெற்று இறுதி நாளாகிய நேற்று இரவு (25) தேவதிகளிளை மந்திரித்து கட்டுதல் தொடர்பான முரன்பாட்டின் காரணமாகவே இரு குழுக்களிடையே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
