
புலம்பெயர்ந்த இலங்கையர்களின் வசதிக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட கவுன்ட்டர் ஒன்று திறக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தங்களுடைய பணிகளை எவ்வித இடையூறும் இன்றி உடனடியாக மேற்கொள்வதற்கு இந்த கவுண்டர் ஊடாக முடியும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ஆனால் புலம்பெயர் மைப்புக்கள் சில உட்பட பல தனிநபர் பெயர்களை தடைப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ள ஶ்ரீலங்கா அரசாங்கம் புலம்பெயர் இலங்கையர்களை கண்காணிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இப் புதிய நடைமுறை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
இதேவேளை, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய லங்கா ரெமிட் விண்ணப்பம், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், முறைசாரா வழிகளில் வெளிநாட்டுப் பணம் இலங்கைக்கு அனுப்பப்படுவதைக் குறைக்க இந்தப் பயன்பாடு உதவும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
இது தொடர்பில் வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு இன்று (26) இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.