Home செய்திகள் தரை, வான், கடல் மட்டுமன்றி இணையவெளி யுத்தத்தை எதிர்கொள்ளவும் இராணுவம் தயாராக இருக்க வேண்டும்: ஜனாதிபதி

தரை, வான், கடல் மட்டுமன்றி இணையவெளி யுத்தத்தை எதிர்கொள்ளவும் இராணுவம் தயாராக இருக்க வேண்டும்: ஜனாதிபதி

60
0

எதிர்காலத்தில் தரை, வான், கடல் மட்டுமன்றி இணையவெளியிலும் யுத்தம் நிகழலாம் எனவும், அவ்வாறான தொழிநுட்ப யுத்தத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான அறிவாற்றலுடன் எமது இராணுவம் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி நிறங்கள் மற்றும் பல்கலைக்கழக நிறங்கள் வழங்கும் நிகழ்வில் நேற்று (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

வெற்றிகரமான இராணுவத்தை உருவாக்க ஒழுக்கம், பயிற்சி மற்றும் அறிவு அவசியம் என சுட்டிக்காட்டியதோடு, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஏற்கனவே இந்த தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

பின்னர், சேர் ஜோன் கொத்தலாவல நூதனசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, விசேட அதிதிகளின் நினைவுப் புத்தகத்தில் குறிப்பு ஒன்றையும் வைத்தார். அங்கு ஜனாதிபதிக்கு விசேட நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

அங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையி;

“இன்று சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் புகழைப் பெற்றுள்ளது. ஒரு பாதுகாப்பு பல்கலைக்கழகமாக உங்கள் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு இராணுவம் அதன் தளபதியால் வழிநடத்தப்பட்டால், அந்த இராணுவம் அவரது தலைமையை சார்ந்துள்ளது. மேலும் அந்த இராணுவத்திற்கு ஒழுக்கம் தேவை. ஒரு இராணுவம் ஒழுக்கம் இல்லாமல் முன்னேற முடியாது. ஒரு இராணுவம் சரியான ஒழுக்கத்துடன் மட்டுமே முன்னேற முடியும்.

இங்குள்ள தலைவர்களுக்கு ஒழுக்கம், பயிற்சி மற்றும் அறிவு கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து, இராணுவம் தனது சொந்த படைப்பிரிவுகளுக்கும் பிற பிரிவுகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்குகிறது. சிலர் ராணுவ தளபதிகளாக மாறுகிறார்கள். மற்றவர்கள் இந்த பட்டம் பெற்ற பல்வேறு துறைகளில் சென்று வேலை செய்கிறார்கள்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல காரணமாகவே கேடியுவை ஸ்தாபிக்க முடிந்தது. இந்தப் பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து நமது பாதுகாப்புப் படைகளுக்கு மேலும் திறமையான அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.என்றார்.