தாம் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த மூலிகே அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இன்று (26) வெள்ளிக்கிழமை வசந்த மூலிகே சார்பில் குறித்த மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் கைது செய்யப்பட்ட வசந்த மூலிகே உட்பட்ட மூவரை 90 நாட்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விச்சரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியிருந்த நிலையில் ஐ.நா பிரதிநிதிகள் உட்பட அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாடுகள் என்பன கண்டனத்தையும், கவலையையும் வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.