Home செய்திகள் 2 மாதங்களில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்த இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம்:

2 மாதங்களில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்த இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம்:

45
0

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் கடந்த 2 மாதமாக ஒவ்வோர் மாதமும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டில் ஆடை ஏற்றுமதி மூலம் இலங்கை 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியிருந்த நிலையில். இவ் ஆண்டு கடந்த 7 மாதங்களில் இதுவரை நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானம் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.

இவ் ஆண்டின் – ஜூன் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 536.65 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், ஜூலை மாதத்தில் 522.13 மில்லியன் டொலர்கள் வருமானமாகவும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.