யாழ்ப்பாணம் சுதுமலையில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இனம் தெரியாத குழுவொன்று அங்கிருந்த இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளிகள் என்பன பெட்ரோல் உத்தி தீக்கிரையாக்கப்படுள்ளது.
குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கான இளைஞன் மானிப்பாயில் அண்மையில் இடம் பெற்ற கடை ஒன்றின் மீதான வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெற மானிப்பாய் காவல்துறையினர் அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.