Home தாயக செய்திகள் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு – பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க முடிவு!

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு – பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க முடிவு!

68
0

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெற்றோல் ஆகிய இரண்டும் இருப்பு இல்லை எனவும், இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி. வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல், டீசல் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனவே நாளை முதல் பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.