Home உலக செய்திகள் மியான்மருக்கான இங்கிலாந்து முன்னாள் தூதர் கைது!

மியான்மருக்கான இங்கிலாந்து முன்னாள் தூதர் கைது!

53
0

மியான்மருக்கான இங்கிலாந்து முன்னாள் தூதுவர் Vicky Bowman மற்றும் அவரது கணவர் ஆகியோரை மியான்மர் ராணுவ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Vicky Bowman மியான்மாரின் விசா விதிகளை மீறியதாகவும், அவரது கணவர் மியான்மரில் தங்குவதற்கு சட்டத்திற்கு புறம்பாக உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டே இருவரையும் மியான்மர் ராணுவ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Vicky Bowman கடந்த 2002 முதல் 2006 வரை மியான்மரில் தூதராக பணியாற்றியவர் என்பதும், முன்னாள் அரசியல் கைதியான Htein Lin என்பவரை திருமணம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள Vicky Bowman மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.