Home உலக செய்திகள் டொனால்ட் ட்ரம் வழக்கு – புலனாய்வாளர்களுக்கு அமெரிக்க நீதிபதி விடுத்த உத்தரவு!

டொனால்ட் ட்ரம் வழக்கு – புலனாய்வாளர்களுக்கு அமெரிக்க நீதிபதி விடுத்த உத்தரவு!

57
0

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புளோரிடா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின் திருத்தப்பட்ட பதிப்பை வெளியிடுமாறு புலனாய்வாளர்களுக்கு அமெரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாம் பீச்சில் உள்ள மார்-ஏ-லாகோவில் கண்டுபிடிக்கப்பட்ட புலனாய்வாளர்கள் கூறும் இரகசிய கோப்புகள் ஏற்கனவே அவராலேயே வகைப்படுத்தப்பட்டவை என்று டொனால்ட் ட்ரம் வலியுறுத்தினார்.

இந் நிலையில், அமெரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி புரூஸ் ரெய்ன்ஹார்ட், வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணிக்குள் பிரமாணப் பத்திரத்தை திருத்தங்களுடன் வெளியிட உத்தரவிட்டுள்ளார்.

ஆதாரங்கள் மற்றும் முறைகள்” ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஆவணத்தின் சில பகுதிகளை இருட்டடிப்பு செய்வதற்கு சாட்சிகள், சட்ட அமலாக்க முகவர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்படாத தரப்பினரின் வழக்கறிஞர்கள் நிர்பந்தமான காரணத்தை நிரூபித்துள்ளனர் என்று அவர் கூறினார்.