Home ஆன்மீகம் இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வீதியுலா வரும் நல்லை கந்தன் சித்திரத் தேர்!

இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வீதியுலா வரும் நல்லை கந்தன் சித்திரத் தேர்!

98
0

இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தின் “தேர் திருவிழா” இன்று இலட்சக்கணக்கான பக்தர்களோஒடு சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை காணவும், முருகப்பெருமானின் அருளைப்பெறவும் இலங்கையின் பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அலை அலையாக அங்கு வந்து கூடியுள்ள அதேவேளை இம்முறை பல வெளி நாடுகளில் இருந்தும் புலம்பெயர் தமிழர்களும், வேற்று இனத்தவர்களும் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத் தேரில் முருகப்பெருமான் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் காட்சி பார்ப்போர் கண்ணை கொள்ளைகொள்வதாக அமைந்துள்ளது.