Home தாயக செய்திகள் மக்கள் வெள்ளம் அலைமோத சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் சப்பற திருவிழா!

மக்கள் வெள்ளம் அலைமோத சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் சப்பற திருவிழா!

50
0

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தனின் சப்பறத்திருவிழா இன்று பெருந்திரளான பக்தர்களோடு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இன்றைய மாலைநேர உற்சவமான சப்பறத் திருவிழாவின் போது கோவிலின் மூன்று வீதிகள் மக்கள் வெள்ளத்தால் முழுமையாக நிரம்பியிருந்தது.

இலங்கையின் புகழ் பூத்த ஆலயமாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாகவும் விளங்கும் “அலங்காரக் கந்தன்” என பெயர் பெற்ற நல்லூர் முருகன் கோவிலின் வருடாந்த திருவிழாவின் 23 ஆம் நாளான இன்று புதிய அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் முருகன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நல்லூர் முருகன் கோவிலின் மூன்று வீரிகளிலும் அண்மையில் அமைக்கப்பெற்ற புதிய ராஜகோபுரங்களின் உயரத்தில் இன்றைய சப்பறம் அமையப்பெற்றிருந்தது பார்ப்போர் கண்களை கொள்ளை கொண்டிருந்தது.

இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் ரதோற்சவம் (தேர் திருவிழா) இடம்பெற உள்ளமையால் இன்றை விட நாளைய தினம் பல மடங்கு மக்கள் கோவிலுக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுவதால் ஆலயத்தை சுற்றிலும் யாழ்ப்பாண மாநகரசபையை சேர்ந்த காவல் பணியாளர்களும், ஶ்ரீலங்கா பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.