விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரம் (125,000) இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த இந்து முன்னணி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
இது தவிர ஏனைய இந்து அமைப்புக்களும், பொதுமக்களும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகி வரும் நிலையில் இம்முறை தமிழ்நாடு எங்கும் விநாயகர் சதுர்த்தி பெருமளவு மக்களால் மூலை முடுக்கெங்கும் கொண்டாடப்பட உள்ளது.
கடந்த இரண்டு (2) வருடங்களாக கொரோனா இடர் காரணமாக களையிளந்து கட்டுப்பாடுகளோஒடு காணப்பட்ட தமிழ்நாட்டில் இம்முறை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடைகள் எங்கும் விநாயகர் சிலைகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.