Home உலக செய்திகள் ஐரோப்பிய சுரங்கத்துள் பழுதடைந்த ரயில் – பல மணி நேரம் சிக்கித்தவித்த மக்கள்!

ஐரோப்பிய சுரங்கத்துள் பழுதடைந்த ரயில் – பல மணி நேரம் சிக்கித்தவித்த மக்கள்!

66
0

பிரான்ஸின் Calais பகுதியிலிருந்து இங்கிலாந்தின் Folkestone நோக்கி பயனித்த சுரங்கவழி தொடரூந்து இடைநடுவே பழுதடைந்ததால் அதில் பயனித்த பயணிகள் பல மணி நேரமாக சுரங்கத்துள் சிக்கித் தவித்துள்ளனர்.

நேற்று (23) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் Eurotunnel ஊழியர்கள் விரைவாக செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக அவசர சேவை சுரங்கபாதை ஊடாக வெளியேற்றி மாற்று தொடரூந்துக்கு மாற்றப்பட்டு Kent பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

வாகனங்களை கைவிட்டு சுரங்க வழியே நடந்தும், மாற்று ரயில் மூலமும் இங்கிலாந்து வந்தடைந்த மக்களில் பலர் குறித்த சம்பவம் தொடர்பில் கூறுகையில், அது ஒரு பேரழிவு படம் போல் இருந்ததாகவும், தாங்கள் கரை வந்து சேருவோமா என்ற பயமே தமக்கு பெரிதாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.