இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளிற்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
செவ்வாய்க்கிழமை (23) மாலை இலங்கை வந்தடைந்த பீட்டர் புரூவர் மசகிரோ நொசாகி தலைமையிலான சர்வதேச நாணயநிதியத்தின் குழுவினர் 31 ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கான நிதி உதவி தொடர்பிலான விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே இந்த பேச்சுவார்த்தைகளின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. எனினும், இதன்போது இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.