
இங்கிலாந்தின் லிவர்பூல் பிரதேசத்தின் Dovecot பகுதியில் உள்ள வீடொன்றில் 9 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் Olivia Pratt-Korbel என்ற 9 வயதுச் சிறுமியே பலியானவராவார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
திங்கட்கிழமை (22) இரவு நபர் ஒருவரை துரத்திய படியே “ஒலிவியா” வின் வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த தாக்குதல்தாரி துப்பாக்கியால் சுட்ட் போது Olivia வின் தாயாரான Cheryl கையில் துப்பாக்கி ரவை துழைத்துச் சென்றுள்ளது. அப்போது தாயாரின் பின்னால் நின்றிருந்த Olivia வை நோக்கி துப்பாகி தாரி சுட்டதாகவும், துப்பாக்கி ரவைகள் Olivia வின் மார்பை துழைத்துச் சென்றுள்ளது.
இதே வேளை முகமூடி அணிந்த தாக்குதல்தாரி துரத்திச் சென்ற நபரும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான போதும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள CCTV களை ஆராய்துவரும் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் சிறு தகவல் தெரிந்தால் கூட அதை தமக்கு தெரியப்படுத்தி கொலையாளியை கண்டுபிடிக்க ஒத்துழைக்குமாறு மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.