Home செய்திகள் ஶ்ரீலங்கா கடற்படையினரால் 10 இந்திய மீனவர்கள் கைது!

ஶ்ரீலங்கா கடற்படையினரால் 10 இந்திய மீனவர்கள் கைது!

66
0

சர்வதேச கடல் எல்லையை தாண்டி முல்லைத்தீவை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுளைந்த இந்திய படகு ஒன்றையும், அதில் இருந்த 10 பேரையும் ஶ்ரீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை கண்காணிக்கவும், விரட்டுவதற்குமான விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஶ்ரீலங்கா கடற்படையினர் நேற்றைய (22) தினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே இக் கைது இடம்பெற்றது.

ஶ்ரீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய இழுவை படகு மற்றும் 10 இந்திய மீனவர்கள் தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவர்கள் திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.