Home தாயக செய்திகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு புதிய பெயர் “தேசிய பாதுகாப்பு சட்டம்”.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு புதிய பெயர் “தேசிய பாதுகாப்பு சட்டம்”.

45
0

1979இலிருந்து நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு புதிய முகம் கொடுக்கப்பட்டு “தேசிய பாதுகாப்பு சட்டம்” ஆக அது அறிமுகப்படுத்தப்படுமென, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தத்தில் பெயர் மாற்றம் மட்டும் இடம்பெறவுள்ளதையும், சட்டத்தில் மாற்றங்கள் இன்றி இயங்கவுள்ளதையும், கைதுகளும், அடக்குமுறைகளும் தொடரும் என்பதை சூசகமாக அமைச்சர் பந்துல குணவர்தன கூரியுள்ளதாகவே தெரிகிறது.

இன்றையதினம் (23) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.