உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படி, உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் லெபனான் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் துருக்கி ஆகியவை உள்ளன.
பட்டியலில் ஐந்தாவது இடத்திலுள்ள இலங்கைக்கு அடுத்தபடியாக ஈரான், ஆர்ஜென்டினா, சூரினாம், எத்தியோப்பியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் உள்ளன.
இலங்கையில் உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாய உற்பத்தி 40 வீதம் முதல் 50 வீதம் வரை குறைந்துள்ளதாகவும், உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.