
உலக அளவில் மிக வேகமாக பரவும் BA.5 கொரோனா திரிபு வைரஸ் இலங்கையில் மேலும் நான்கு மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஜீவவாயு ஆய்வுப் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
மேற்படி பிரதேசங்களில் பெற்றுக்ெகாள்ளப்பட்ட 67 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து அதில் 60 மாதிரிகள் மூலம் கடுமையான கொரோனா திரிபு வைரஸ் அப்பகுதிகளில் பரவியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய ஏழு மாதிரிகளும் ஒமிக்ேரான் திரிபு வைரஸாக இனங்காணப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
அந்தவகையில் கொழும்பு, கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலிருந்து மேற்படி மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதன்மூலமே இந்த நான்கு மாவட்டங்களிலும் மிக வேகமாக பரவும் பிஏ5 கொரோனா திரிபு வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் மேலும் பல பிரதேசங்களில் இந்த திரிபு வைரஸ் பரவியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சினால் தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள மாதிரிகள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்பே பேராசிரியர் சந்திம ஜிவந்தர தலைமையிலான குழு இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.