Home சினிமா இயக்குனர் இமையம் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

இயக்குனர் இமையம் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

18
0

தென்னிந்திய திரையுலகின் இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

பாரதிராஜா  அவர்கள் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இன்றுவரை மக்கள் மனம்கவர்ந்த தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர்.

இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் அயூத எழுத்து, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, படைவீரன், நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன், மற்றும் அண்மையில் வெளிவந்த “திருசிற்றம்பலம்” உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவராவார்.