Home தமிழகச் செய்திகள் 4 குழந்தைகளுடன் தமிழகத்தில் தஞ்சமடைந்த 8 இலங்கை அகதிகள்!

4 குழந்தைகளுடன் தமிழகத்தில் தஞ்சமடைந்த 8 இலங்கை அகதிகள்!

69
0

தமிழ்நாடு – தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் அகதிகள் தவித்து வருவதாக கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சென்ற கடலோர காவல் படையினர், 4 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 8 பேரை கப்பல் மூலம் மண்டபம் பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.

இவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட இவர்களை இந்தியா- இலங்கை இடையே உள்ள மூன்றாம் மணல் திட்டு பகுதியில் படகோட்டிகள் இறக்கிவிட்டு திரும்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் வாழ வழியின்றி, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.