அரசாங்கத்திற்கு எதிராக எழும் போராட்டக்காரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இளமை இல்லை என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய திஸாநாயக்க, பலாத்காரத்தின் மூலம் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக் கொள்ள முடியாது என்றார்.
“தற்போதைய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் அரகலயாவில் இணைகிறார்கள். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இருப்பதற்கான ஆணை இழந்த 134 எம்.பி.க்களின் ஆதரவுடனேயே தற்போது அரசுக்கு உள்ளது.
ஊழல் நிறைந்த ஆட்சியின் தலைவரை நாங்கள் அகற்றிவிட்டோம். இப்போது அவரைப் போன்றே அரசியல் நிராகரிப்பாளர்களின் உதவியுடன் விக்ரமசிங்கே ஊழல் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கிறார்.
எமது சமூகத்தில் இரண்டு குழுக்கள் உள்ளன. ஒரு பகுதியினரான நூறாயிரம் மக்கள் அமைப்பு மாற்றத்தை கோருகின்றனர். இன்னுமோர் குழுவில் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது 134 எம்.பி.க்கள் மற்றும் வஞ்சகர்களின் கூட்டமே அடங்கியுள்ளது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை காலம் காட்டும்” என்று திஸாநாயக்க கூறினார்.
“விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை. அவர் இன்னும் மூன்று ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்க திட்டமிட்டுள்ளார். அவரால் அப்படிச் செய்ய முடியாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ய பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும். என வலியுறுத்தினார்.