ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் வீடு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு கோரி குற்றவியல் விசாரணை திணைக்களம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாஸவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
இதனடிப்படையில் அவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (20) முற்பகல் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள துலாஞ்சலி பிரேமதாஸ, தற்போதைய ஜனாதிபதியின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க வருமாறு அழைத்தனர்.
நான் வந்து வாக்குமூலம் வழங்கினேன். சம்பவம் நடந்த போது நான் அங்கு ஓரிடத்தில் இருந்தேன்.
விசாரணைகளுக்கு உதவுவதற்காக என்னை வருமாறு அழைத்தனர். விசாரணை அதிகாரிகள் நட்புறவாக உரையாடினர்.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் போராட்டங்களை நடத்தினர். விசாரணைகளுக்கு உதவ வந்து வாக்குமூலம் வழங்குமாறு கூறும் போது நாம் வந்து உண்மையை கூறினால், எமக்கு எந்த பிரச்சினையுமில்லை.
அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்ததால் அழைத்து விசாரித்தனர். வேறு விடயங்கள் இல்லை. இத்தோடு முடிந்து விட்டது என துலாஞ்சலி கூறியுள்ளார்.