சரியாக வேலை செய்ய முடியாத அரச ஊழியர்கள் இருந்தால் உடனடியாக வெளியேறுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (21) அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்திச் சபையில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில்; அரச ஊழியர்கள் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவின் மேம்பாட்டிற்காக அடிமட்ட மட்டத்தில் உள்ள அரச ஊழியர்கள் உழைக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும், சரியாக வேலை செய்ய முடியாத அரச ஊழியர்கள் இருந்தால் உடனடியாக வெளியேறுமாறு கூறினார்.
மேலும், அநுராதபுரம் சமயப் பகுதிகள் விரைவில் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அது தொடர்பான அனைத்து பங்குதாரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று விரைவில் நியமிக்கப்படும் என்றும், வெளிநாட்டு ஆலோசகர்கள் இதன் அபிவிருத்திக்கு காரணியாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
பழைய ஆட்சி முறை மக்களால் நிராகரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எல்லையில்லாமல் அனைவரையும் ஒன்றிணைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் முன்னணியில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.