Home முக்கிய செய்திகள் இலங்கை உத்தியோகபூர்வமாக கடனாளிகளை அணுகவில்லை – இலங்கை மத்திய வங்கி தலைவர்!

இலங்கை உத்தியோகபூர்வமாக கடனாளிகளை அணுகவில்லை – இலங்கை மத்திய வங்கி தலைவர்!

56
0

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டிய பின்பே அனைத்து வெளி கடனாளிகளையும் அணுகி நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கும் எனவும், கொடுப்பனவுகளில் நிவாரணம் கிடைக்கும் எனவும் இலங்கை மத்திய வங்கி தலைவர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

“அதற்கு, எங்களின் வெளி கடனாளிகளிடம் இருந்து நமக்கு நிதி உத்தரவாதம் தேவை. அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள், அனைத்தும் சரியாகி, அனைத்து வெளி கடனாளிகளும் இலங்கை அரசாங்கத்தின் கடன் மேலாண்மை மூலோபாயத்துடன் ஒத்துழைத்தால், நிதி உத்தரவாதம் கிடைக்கும் என நம்புகிறோம்.எனவும் அவர் தெரிவித்தார்.

டிசம்பரில் எங்காவது, IMF எங்கள் ஆவணத்தை நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கலாம், இதனால் அவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை வழங்கத் தொடங்கலாம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.