Home உலக செய்திகள் இலங்கையில் தவறாக பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் தவறாக பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

45
0

அண்மையில் கைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியதாக வெளியான அறிக்கைகள் குறித்து கவலை கொண்டுள்ளதாக இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைத் தடை குறித்து சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய தகவல்களுக்கு முரணாக இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக அக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.