Home செய்திகள் அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வர நடவடிக்கை!

அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வர நடவடிக்கை!

47
0

முச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கட்டண நிர்ணயம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இத் தகவலை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டுள்ள போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.