Home செய்திகள் 1,000லி டீசல் கடத்திய நபர் கைது!

1,000லி டீசல் கடத்திய நபர் கைது!

51
0

சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றில் டீசல் ஏற்றிச் சென்ற நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹினிதும பிரதேசத்தில் வீதித் தடுப்பில் வண்டியைச் சோதனையிட்டபோது கெப் ரக வண்டிக்குள் 1,000 லிட்டர் டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 31 வயதுடைய நபர் பெலவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உடுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.