இலங்கையில் டெங்கு நோய் அதிகரித்துவருவதாகவும், இதில் வாரம் ஒன்றிற்கு 1500 டெங்கு நோயாளர் வீதம் காணப்படுவதாகவும் “தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு” தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், பிரதம தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் – டெங்கு, கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா நோய்கள் அதிகமாகப் பரவி வருவதால், நோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் டாக்டர் சமரவீர பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.