Home உலக செய்திகள் மாஸ்கோ குண்டுவெடிப்பில் புடினின் கூட்டாளியின் மகள் பலி!

மாஸ்கோ குண்டுவெடிப்பில் புடினின் கூட்டாளியின் மகள் பலி!

47
0

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகே நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியின் மகள் Darya Dugina கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (20) இடம்பெற்ற இக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட Darya Dugina இன் தந்தையும், புடினின் நெருங்கிய நண்பரும், தத்துவஞானியுமான Alexander Dugin ஐ குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

“விருந்தினர் கெளரவிப்பு விழா” ஒன்றில் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட Alexander Dugin நிகழ்வு முடிந்ததும் அதே காரில் திரும்பிச் செல்ல இருந்ததாகவும், கடைசி நிமிடத்தில் தனது மகளிடம் இருந்து தனித்தனியாக பயணம் செய்யும் முடிவை Alexander Dugin எடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.