இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலையை 253 ரூபாவால் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 87 ரூபாவிலிருந்து 340 ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இவ் ஆண்டின் ஆரம்பம் முதல் எரிவாயு (Gas) படிப்படியாக அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ள நிலையில் மக்கள் தமது சமையல் பாவனைக்காக மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு மாறி ஓரளவு தமது வாழ்க்கைச் செலவுகளை சமாளித்து வந்துகொண்டிருக்கும் இந்த நிலையில் திடீரென மண்ணெண்ணெய் விலையை நான்கு (4) மடங்கு அதிகரித்திருப்பது மக்களை அரசாங்கம் மீது எரிச்சல் கொள்ள வைத்துள்ளது.