Home உலக செய்திகள் தமிழர்களின் ஆதரவைக் கோரும் ரிஷி சுனக்!

தமிழர்களின் ஆதரவைக் கோரும் ரிஷி சுனக்!

59
0

பிரித்தானிய பிரதமர் போட்டியில் முன்னணியில் இருந்து வந்த ரிஷி சுனக் தற்போது பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இலங்கைத் தமிழ் மக்களின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதற்காக அவர் அங்கம் வகிக்கும் பழமைவாதக் கட்சியின் ஆதரவாளர்களான இலங்கை தமிழர்களுடன் சந்திப்பு ஒன்றை நடாத்தினார்.

அச் சந்திப்பின்போது உரையாற்றுகையில்;

இலங்கையானது பணவீக்கம் மற்றும் அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் உள்ளதாக தெரிவித்த ரிஷி சுனக், ரஷ்யர்கள் மீது இங்கிலாந்து தடைகளை பயன்படுத்தியதைப் போன்றே இலங்கை அரசாங்கமும் அங்குள்ள அதிகாரிகள் மீதும், ஜனநாயக போராட்டக்காரர்கள் மீதும் இலக்குவைத்து தடைகளைப் பிரயோகிப்பதாக சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் நடந்த பாரிய அட்டூழியங்களுக்கு நீதி வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அவர் ஊழல் மற்றும் “இராணுவத்தின் பொருத்தமற்ற செல்வாக்கு” இல்லாத ஜனநாயக தீவின் பார்வை தனக்கு இருப்பதாகவும், இலங்கை மீது கடுமையான நிலைப்பாட்டை எடுக்க சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் சுனக் கூறினார்.

இலங்கை தொடர்பான சமீபத்திய ஐ.நா தீர்மானத்திற்கு தனது ஆதரவை வலியுறுத்திய ரிஷி சுனக், நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கொண்டுவருவதில் இங்கிலாந்து தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் கூறினார்.