இங்கிலாந்தின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகமான Felixstowe இல் கப்பல்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Felixstowe துறைமுகத்தில் யுனைட் யூனியனின் 1900 உறுப்பினர்கள் தமது ஊதியம் தொடர்பாக கடந்த 8 நாட்களாக வெளிநடப்பு செய்துவரும் நிலையில், இந்த வேலை நிறுத்தம் ஏமாற்றமளிப்பதாக துறைமுக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Felixstowe துறைமுகம் மற்றும் ரயில்வே நிறுவனத்திடமிருந்து 7% ஊதிய சலுகையை தமது உறுப்பினர்கள் நிராகரித்ததாகவும், இது இங்கிலாந்தின் பணவீக்க விகிதத்தை விட குறைவாக இருப்பதாகவும் யுனைட் யூனியன் கூறியுள்ளது.
இங்கிலாந்தின் கொள்கலன் வர்த்தகத்தில் சுமார் 48% வர்த்தகம் இடம்பெறும் துறைமுகமாக இயங்கிவரும் Felixstowe துறைமுகத்தில் சுமார் 2550 பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.