Home செய்திகள் அதிக கட்டணம் வசூலித்த 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது NTC நடவடிக்கை!

அதிக கட்டணம் வசூலித்த 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது NTC நடவடிக்கை!

45
0

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த 100க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இந்த பஸ்கள் அடையாளம் காணப்பட்டதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதாகவும், மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினாலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.