Home செய்திகள் சமையல் எரிவாயு, சீமெந்து உள்ளிட்ட சில பொருட்களின் விலை கட்டுப்பாட்டு விலையில்!

சமையல் எரிவாயு, சீமெந்து உள்ளிட்ட சில பொருட்களின் விலை கட்டுப்பாட்டு விலையில்!

54
0

சமையல் எரிவாயு, சீமெந்து உள்ளிட்ட சில பொருட்களின் விலையில் வினியோகிக்க அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாகவும், அதற்கான கட்டுப்பாட்டு விலைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது சமையல் எரிவாயு  விநியோகம் பழமையான நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் உலகச்சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை, அதற்கான இறக்குமதி செலவுகள் மற்றும் நுகர்வோருக்கு சமையல் எரிவாயுவை வழங்கக்கூடிய சில்லறை விலை ஆகியவை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அதற்கிணங்க சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக சீமெந்து, இரும்பு, டயர்கள் மற்றும் பிஸ்கட் வகைகள் உட்பட பல்வேறு உற்பத்தி பொருட்களினதும் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ளன. இந்த விலைகள் நியாயமானதா என்பதை ஆராய்வதற்காக அந்த பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்பவர்கள் நுகர்வோர் அதிகார சபைக்கு வருகை தந்து அது தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு தாம் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.