Home முக்கிய செய்திகள் 100 மில்லியன் பெறுமதியுள்ள தொல்பொருட்களை விற்பனை செய்ய முயன்ற கொள்ளையர்கள் கைது!

100 மில்லியன் பெறுமதியுள்ள தொல்பொருட்களை விற்பனை செய்ய முயன்ற கொள்ளையர்கள் கைது!

18
0

சுமார் 100 மில்லியன் பெறுமதியுள்ள கொள்ளையடிக்கப்பட்ட புதையல் மற்றும் தொல்பொருட்களை விற்பனை செய்ய முயன்ற ஐந்து பேரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் குற்றப்பிரிவு மற்றும் அநுராதபுரம் பிராந்திய பிரதிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் இருந்து கல்லால் செதுக்கப்பட்ட இரண்டு பழங்கால கையெழுத்துப் பிரதிகளும், கல்லால் செய்யப்பட்ட ஒன்பது அலங்காரப் பெட்டிகளும் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.