Home செய்திகள் யாழில் – சந்தையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

யாழில் – சந்தையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

15
0

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (19) காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த சடலத்தை மீட்ட பொலிஸார் சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு இறப்பிற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசேட தேவைக்குட்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.