இங்கிலாந்தில் வாரக்கணக்கான வெப்பம் மற்றும் வறண்ட நிலைகளுக்குப் பிறகு, பல பகுதிகள் சமீபத்திய நாட்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் மத்தி மற்றும் கிழக்கு பிரதேசங்களிலேயே இவ்வாறு கனமழை பதிவாகியுள்ளது. அதேவேளை இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள ஹாலண்ட் பார்க், ஏர்ல்ஸ் கோர்ட், கென்டிஷ் டவுன், டர்ன்பைக் லேன், லௌடன் மற்றும் டோட்டன்ஹாம் ஹேல் வடக்கு நோக்கி செல்லும் சுரங்க ரயில் நிலையங்கள் வெள்ளத்தால் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் உள்ள ஒரு நகரம் மூன்று மணி நேரத்தில் மாத சராசரி மழைப்பொழிவை விட இரண்டு மடங்கு அதிகமாக பெய்துள்ளது.
1935 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தின் கோடைகாலமான ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்கள் மிக வறண்ட காலமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவ் வருடம் கடந்த இரு நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்துள்ளதோடு வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.