பிரிட்டனில் -றெயில்வே ஊழியர் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (18) வியாழக்கிழமை 20% சேவைகள் மட்டுமே இயங்குவதால் ரயில் பயணிகள் அதிக இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர்.
45,000 க்கும் மேற்பட்ட றெயில்வே தொழிலாளர்கள் ஊதியம், வேலைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்துவருவதால் பிரிட்டனின் பாதி வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை நாளை மறுதினமான சனிக்கிழமையும் றெயில்வே ஊழியர்களின் போராட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.