
பிரித்தானியாவின் கிரீன்ஃபோர்டில் உள்ள கேடன் சாலையில் 87 வயதான Thomas O’Halloran என்ற முதியவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளனர்.
நேற்று முந்தினம் (செவ்வாய்கிழமை) மாலை 4 மணியளவில் Greenford இல் உள்ள Cayton Road இல் mobility scooter இல் பயணித்த தாமஸ் ஓ ஹாலோரன்(87) என்ற முதியவரே, மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வந்த காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை குழு போதிய முதலுதவி சிகிச்சைகள் வழங்கியும் Thomas O’Halloran (87) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கிய பொலிஸார், Thomas O’Halloran ஐ கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
மேலும் விசாரணையை வழிநடத்தும் தலைமை காவலர் ஜிம் ஈஸ்ட்வுட் தெரிவித்த கருத்தில், கொலையாளி மிகவும் ஆபத்தான நபர், மக்கள் யாரும் அவரை நேரடியாக அணுக வேண்டாம், ஆனால் அவரை பற்றியோ அல்லது அவர் இருக்கும் இடம் குறித்தோ ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக 999 வழியாக தகவல் தெரிவிக்கவும் என கேட்டுக் கொண்டுள்ளார்.