Home தாயக செய்திகள் கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 10 பேர் ஶ்ரீலங்கா கடற்படையினரால் கைது!

கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 10 பேர் ஶ்ரீலங்கா கடற்படையினரால் கைது!

59
0

தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் ஶ்ரீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (16) இரவு தலைமன்னார் – குருசபாடு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த 10 பேரையும் ஶ்ரீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில், படகு ஓட்டுநர்களான இருவர் உட்பட  4 ஆண்கள்,   2 பெண்கள் மற்றும்18 வயதுக்குட்பட்ட 04 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படடுள்ளது.