Home செய்திகள் யாழில் மாணவனை தாக்கிய அதிபர் – விசாரணைகளை ஆரம்பித்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!

யாழில் மாணவனை தாக்கிய அதிபர் – விசாரணைகளை ஆரம்பித்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!

48
0

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கடுமையாக தாக்கப்பட்ட 14 வயது மாணவன் உடல் மற்றும் உள ரீதியாக பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிபரினால் கூறப்பட்ட வேலையை மாணவன் செய்யாத காரணத்தினாலேயே, அதிபர் குறித்த மாணவனை கடுமையாகத் தாக்கியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தில், மாணவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன் உடலில் பல இடங்கள் கடும் வலியும், காயங்களும் ஏற்பட்டுள்ளதோடு, உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை, பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.