
தற்போதுள்ள சூழலை சரியாக கையாண்டு தமிழர் பிரச்சனையை தீர்க்க கட்டம் கட்டமாகவேனும் தீர்வை பெற்றுத்தரவல்ல அரசியல் தலைவராகவும், இலங்கை மக்களின் வேதனைகளை, தேவைக̀ளை உணர்ந்தவராகவும், சர்வதேச நாடுகளது நகர்வுகளை புரிந்து அதற்கே̀ற்ப காய்களை நகர்த்தி சட்ட நுணுக்கங்களோடு இனப்பிரச்சனைக்கும், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வை காணக்கூடிய அரசியல் தலைவராகவும் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களே உள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிடவிரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இன்று காலை எமது ஊடகத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது;
இலங்கையில் நீண்ட நெடும் காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழர் பிரச்சனைகளால் தொடர் இழப்புக்களையும், மன உளைச்சல்களையும் சந்தித்துள்ள மக்களுக்கு சந்தர்ப்பங்களை சரிவர சாதகமாக பயன்படுத்தி படிப்படியாகவேனும் தம் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இன்றைய விருப்பாக உள்ளது.
அந்த வகையில் மக்கள் அதற்கான தலைவரை தேர்வு செய்யவேண்டிய கட்டாய காலகட்டத்தில் உள்ள இவ் வேளையில் தமிழ் அரசியல்வாதிகளின் கட்சி நலன்சார் செயற்பாடுகள் மற்றும் அறிக்கைகளால் சலித்துப் போயுள்ளார்கள்.
இந்த நிலையில், தற்போதுள்ள சூழலை சரியாக கையாண்டு தமிழர் பிரச்சனையை தீர்க்க கட்டம் கட்டமாகவேனும் தீர்வை பெற்றுத்தரவல்ல அரசியல் தலைவராகவும், இலங்கை மக்களின் வேதனைகளை, தேவைக̀ளை உணர்ந்தவராகப்வும், சர்வதேச நாடுகளது நகர்வுகளை புரிந்து அதற்கே̀ற்ப காய்களை நகர்த்தி சட்ட நுணுக்கங்களோடு இனப்பிரச்சனைக்கும், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வை காணக்கூடிய அரசியல் தலைவராக சி.வி.விக்னேஸ்வரன் அவர்களே உள்ளார்.
சுமந்திரனை பொறுத்தவரையில் சட்ட நுணுக்கங்கள் மற்றும் அரசியல் காய் நகர்த்தல்கள் தெரிந்தவராக இருந்தாலும் அவரை பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகள் ஏற்க மறுக்கின்றனர். அதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் கோட்பாடுகளை முன்னிறுத்தி கடுமையான தேசியவாதம் பேசி வரும் கஜேந்திரகுமாரையும் ஏற்க மறுக்கின்றனர். காரணம் ஆயுதங்களோடும், நிலப்பரப்போடும் புலிகள் பலமாக இருந்த காலத்திலேயே பெறமுடியாதவையை சிங்களவர்கள் இப்போது வழங்கமாட்டார்கள் என்பதாகும்.
முன்னர் கட்சிகளுக்காகவும், அமைப்புக்களுக்காகவும் மக்கள் பிரிந்து நின்றதும், உழைத்ததும் உண்டு. ஆனால் இப்போது அப்படியல்ல. சிறு சிறு குழுக்களாக கட்சிக்கும், அமைப்புக்களுக்கும் ஆதரவுகள் வழங்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான மக்கள் சலிப்படைந்துள்ளமையையே காண முடிகிறது.
எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் பல இழுபறிப்பாடுகள் இருக்கவே செய்கின்றது. இப்போது அது அதிகமாகிவருகிறது. தலைவர் சம்பந்தன் அவர்களை ஏற்கும் மன நிலையில் புலம்பெயர்ந்து வாழ்னின்ற தீவிர தமிழ்த் தேசியவாதிகள் இல்லை. அவரும் வயது முதிர்ந்து உடல் உபாதைகளுக்கும் உள்ளாகியுள்ள நிலையில் அடுத்த தலைமை யார் என்கின்ற பிரச்சனையும் மறுபுறத்தில் சலசலக்கத் தொடங்கிவிட்டது.
இதனால் இனி வரும் காலங்களில் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவதை தவிர்த்து எந்தக் கட்சியாக இருந்தாலும் அவற்றில் தமிழர் நலன்சார்ந்து யார் யார் செயலாற்றுகிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கே தமது ஆதரவுகளை வழங்க விரும்புகின்றனர். இதை இப்போதே சில சந்தர்ப்பங்களில் காண முடிகிறது.
ஆகவே, இப்போது இலங்கையில் ஆட்சியாளர்கள் ஆட்டம் கண்டுள்ள நிலைமையை சரிவர கையாண்டு தமிழர் பிரச்சனையை தீர்க்கவும், குறிப்பாக தமிழர் வாழ்விடங்களில் இருந்து படையினரை வெளியேற்றி மக்களை மீள் குடியமர்த்தவௌம், அரசியல் கைதிகளாக பல ஆண்டுகளாக சிறைகளில் உள்ளவர்களை விடுவிக்கவும் தகுதிவாய்ந்த மக்கள் மதிப்பு கொண்ட, சட்ட நுணுக்கம் தெரிந்த, வலிகளையும், தேவைகளையும் உணர்ந்த ஓர் அரசியல் தலைவரின் பின்னால் மக்களும் கட்சிகளும் ஒன்றுபட்டு பயனிக்க வேண்டியது அவசியமாகிறது.
என்னை பொறுத்தவரையில் இதற்கு சிறந்தவராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களே பொருத்தமானவராக உள்ளார் என சொல்வேன். என்றார் அவர்.