Home உலக செய்திகள் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றின் தடையை அதிரடியாக நீக்கினார் ரணில்!

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றின் தடையை அதிரடியாக நீக்கினார் ரணில்!

48
0

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றினதும், தனிநபர் அமைப்புக்கள் சிலவற்றின் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தத் தடை நீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதற்கமைய உலகத் தமிழர் பேரவை (GTF), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), கனடா தமிழ்க் காங்கிரஸ் (CTC), அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC) மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு (TYO) ஆகிய அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

“தமிழீழம்” எனும் சொற்பதத்தை கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீதான தடை நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.