இலங்கையில் இருந்து மேலும் நான்கு அகதிகளாக இன்று காலை இந்தியாவின் ராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெயமாலினி (50) அவரது மகன்கள் பதுர்ஜன் (26), ஹம்சிகன் (22), மகள் பதுசிக (19) ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரே இவ்வாறு மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை இந்தியாவின் ராமேஸ்வரத்தை சென்றடைந்தவர்களாவர்.
குறித்த நால்வரும் ராமேஸ்வரத்தில் கரையிறங்கியதும், தாங்களாக ஆட்டோவில் ஏறி மண்டபம் கரையோர காவல் நிலையத்திற்கு சென்ற அவர்கள், தாங்கள் ஏற்கனவே 2006 முதல் 2019 ஆண்டு வரை மண்டபம் முகாமில் அகதிகளாக தங்கி இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்று வாழ்ந்துவந்த நிலையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழமுடியாத சூழலில் மீண்டும் தமிழ்நாட்டில் தஞ்சமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்திய மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்ன 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளதாக ராமேஸ்வரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.