Home உலக செய்திகள் ஸ்கொட்லாந்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மூவர் காயம்!

ஸ்கொட்லாந்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மூவர் காயம்!

50
0

நேற்று (10) புதன் கிழமை, ஸ்கொட்லாந்து – ஸ்கை (Skye) பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஸ்கை பிரதேசத்தின் Tarskavaig என்ற இடத்தில் 32 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்ததாக காலை 9:00 மணிக்கு சற்று முன்பாக முதலில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், பின்னர் சுமார் 09:30 மணியளவில் டெங்குவில் எட்டு மைல்கள் (13 கிமீ) தொலைவில் நடந்த ஒரு சம்பவத்திற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாகவும் ஸ்கொட்லாந்து காவல்துறை தெரிவித்தது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 47 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் ஸ்காட்டிஷ் நிலப்பரப்பில் Kyle of Lochalsh க்கு அருகிலுள்ள Dornie பகுதியிலும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவங்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.