யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெற்றோலுக்காக வரிசையில் காத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று (10) புதன்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சிவசோதிலிங்கம் சொரூபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.