
நேற்று (10) திருகோணமலை கடற்படை துறைமுகத்தில் இருந்து கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் கட்டளைக்கு அமைவாக கற்கண்காணிப்பில் ஈடு பட்டபோது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய இழுவைப்படகு ஒன்றினையும் அதில் இருந்த 9 கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
இவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுசென்று அங்கிருந்து கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.