
இலங்கையின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்கான தீர்த்தம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி கடந்த 15 நாட்களாக பெரஹரா ஊர்வலம் நடைபெற்று வந்தது.
இதேவேளை, கதிர்காம காட்டுப்பாதை மூடப்பட்டுள்ளது. கடந்த யூலை மாதம் 22 ஆம் திகதி திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மூடப்பட்டது. இம்முறை 29 ஆயிரத்து 694 பேர் காட்டுப் பாதையால் பயணித்திருக்கிறார்கள். பெரும்பாலும் பல சோதனைகளையும் துன்பங்களையும் சந்தித்து அவர்கள் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.